/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேனீ வளர்ப்பு பயிற்சி; விவசாயிகளுக்கு அழைப்பு
/
தேனீ வளர்ப்பு பயிற்சி; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : டிச 10, 2024 11:37 PM
உடுமலை; பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 17,18 ம் தேதிகளில் தேனீ வளர்ப்பு பயிற்சி நடக்கிறது. இதில், விவசாயிகள் பங்கேற்கலாம், என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பொங்கலுார், வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும், 17 மற்றும் 18 ஆம் தேதி, தேனீக்கள் வளர்ப்பு குறித்து இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் பயிற்சி நடக்கிறது.
இதில், தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனீக்களின் வகைகள், தேன் பிரித்தெடுக்கும் முறைகள், தேனிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், தேனைப் பதப்படுத்துதல், தரச்சான்று பெறுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான அனைத்து விளக்கங்களும், துறை சார்ந்த விஞ்ஞானிகள் மற்றும் அனுபவமிக்க தேனீ வளர்ப்பாளர்கள் வாயிலாக பயிற்சியளிக்கப்படுகிறது.
தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் இளைஞர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம்.வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், தொழில்நுட்ப உதவியாளர் மாணிக்கவல்லி, 63794 65045; 94433 79276 ஆகிய எண்களில் அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம், என உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.

