/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காதணி விழாவுக்கு வந்தவர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேனீக்கள்
/
காதணி விழாவுக்கு வந்தவர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேனீக்கள்
காதணி விழாவுக்கு வந்தவர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேனீக்கள்
காதணி விழாவுக்கு வந்தவர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேனீக்கள்
ADDED : ஜூலை 02, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்; தாராபுரத்தில் காதணி விழாவுக்கு வந்திருந்த, 14 பேரை தேனீக்கள் கொட்டியது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள தில்லாபுரியம்மன் கோவிலில் ஹரி என்பவரின் காதணி விழாவுக்காக உறவினர்கள், நண்பர்கள் என, ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அருகிலுள்ள ஒரு மரத்தில் கட்டியிருந்த தேன் கூடு காற்றுக்கு கலைந்து, தேனீக்கள் அனைவரையும் விரட்டியது. அனைவரும் அலறியடித்து ஓடினர்.
இருப்பினும், தேனீக்கள் கொட்டியதில், சமையல் பணியாளர்கள் உட்பட, 14 பேர் காயமடைந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று திரும்பினர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.