/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கந்த சஷ்டி 22ல் துவக்கம் 27ல் சூர சம்ஹார நிகழ்ச்சி
/
கந்த சஷ்டி 22ல் துவக்கம் 27ல் சூர சம்ஹார நிகழ்ச்சி
கந்த சஷ்டி 22ல் துவக்கம் 27ல் சூர சம்ஹார நிகழ்ச்சி
கந்த சஷ்டி 22ல் துவக்கம் 27ல் சூர சம்ஹார நிகழ்ச்சி
ADDED : அக் 18, 2025 11:27 PM
திருப்பூர்: வரும் 22ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன், கந்தசஷ்டி விழா துவங்குகிறது; 27ம் தேதி மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், ஷண்முக சுப்பிரமணியர் சன்னதியில் சிறப்பு பூஜைகளுடன் கந்தசஷ்டி விழா விமரிசையாக நடத்தப்படுகிறது.
வரும் 22ம் தேதி, ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிறப்பு அபிேஷகம் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன், கந்தசஷ்டி விரதம் துவங்குகிறது. 27ம் தேதி வரை, தினமும், காலை, 10:30 மணிக்கு சுப்பிரமணியருக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெறும்.
வரும், 27ம் தேதி மாலை, முருகப்பெருமான், அன்னை பார்வதியிடம் சக்திவேல் வாங்கும் வைபவமும் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது. வரும், 28ம் தேதி காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
நல்லுாரில் ஸ்ரீஸ்கந்த யாகம்
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், சுப்பிரமணியர் சன்னதியில், 22ம் தேதி காலை, 10:00 மணிக்கு, அபிேஷகம் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன், கந்த சஷ்டி விழா துவங்குகிறது. தினமும் காலை அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை நடைபெறும். வரும், 27ம் தேதி காலை, 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து மகா அபிேஷகம்; தொடர்ந்து சூரசம்ஹாரமும், 28ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.
கந்தசஷ்டி விழாவையொட்டி, தினமும் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சியும், 22ம் தேதி துவங்கி, 27 வரை, காலை மற்றும் மாலை வேளையில், ஸ்ரீஸ்கந்த யாக வழிபாடும் நடக்குமென, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.