ADDED : அக் 18, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திங்கள்கிழமை தோறும் திருப்பூர் கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் கால்நடைச்சந்தை நடைபெறும்.
கேரளாவில் இருந்து வியாபாரிகள், கரூர், திண் டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் வருவர். 800 முதல் 950 கால்நடைகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்படும். 1.50 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும்.
நாளை தீபாவளி பண்டிகை என்பதால், நடப்பு வாரம் ஒரு நாள் முன்னதாக, இன்று (19ம் தேதி) மாட்டுச்சந்தை நடைபெறும்.
இதுகுறித்து முன்கூட்டியே வியாபாரிகள், கால்நடை வளர்ப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.