/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில தடகளப் போட்டி; 202 மாணவர்கள் தகுதி
/
மாநில தடகளப் போட்டி; 202 மாணவர்கள் தகுதி
ADDED : அக் 18, 2025 11:27 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தடகள போட்டியில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு, 202 மாணவ, மாணவியர் தகுதி பெற்றுள்ளனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட தடகளப் போட்டி அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளி மைதானத்தில் நடந்தது.
மாவட்டத்திலுள்ள ஏழு குறுமையங்களில் முதலிடம் பெற்ற, 645 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். 100, 200, 400, 800 மீ., ஓட்டம், 400, 1,600 மீ., தொடர் ஓட்டம், 3,000 மீ., தொலை துார ஓட்டம், நீளம், உயரம் மற்றும் தடை தாண்டுதல், மும்முனை தாண்டுதல், ஈட்டி, வட்டு, குண்டு, சங்கிலிகுண்டு எறிதல், போல்வால்ட் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
மாநில போட்டிக்கு தகுதி பெற ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் திறமை காட்டினர். 14 வயதினர் பிரிவில் 23 வீரர், 23 வீராங்கனையர் உள்ளிட்ட, 46 பேர், 17 வயதினர் பிரிவில், தலா 38 வீரர், வீராங்கனையர் என, 76 பேர், 19 வயதினர் பிரிவில், 40 வீரர், 40 வீராங்கனை உட்பட, 80 பேர் என மொத்தம், 101 மாணவர், 101 மாணவியர் என மொத்தம், 202 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பிற போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களும், 4 x 100, 4 x 400 தொடர் ஓட்டங்களில் மட்டும் முதல் இடங்களை பெற்றவர்களும் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.