ADDED : ஆக 02, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வடக்கு பாண்டியன் நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் இணைந்து பள்ளிக்கு பெஞ்ச்கள் வழங்கினர்.
இதில், பெற்றோர் பங்களிப்பாக, 45 ஆயிரம் ரூபாயும், வகுப்பாசிரியர் சந்தோஷ்குமார் மற்றும் நண்பர்கள், 15 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பெஞ்ச்கள் வழங்கப்பட்டன. இதில், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரவி, திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், பள்ளி புரவலர் திட்ட தலைவர் மோகனசுந்தரம், உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் நன்றி கூறினார்.

