/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்கூட்டர் பெற ஆவணம் சமர்ப்பித்த பயனாளிகள்
/
ஸ்கூட்டர் பெற ஆவணம் சமர்ப்பித்த பயனாளிகள்
ADDED : மே 09, 2025 05:50 AM

திருப்பூர்; கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள, வேலைக்குச் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் இலவசமாக வழங்குகிறது. நேர்காணல் மூலம் தகுதியான மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களிடமிருந்து உரிய ஆவணங்கள் பெறப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுவருகிறது.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், ஸ்கூட்டருக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளிடமிருந்து ஆவணங்கள் பெறும் பணி நேற்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் 30 பேர் பங்கேற்று, பணிக்குச் செல்வதற்கான வி.ஏ.ஓ., சான்று மற்றும் ஆதார் உள்பட வாகன பதிவுக்கு தேவையான ஆவணங்களை வழங்கினர்.
ஆர்.சி., புக் மட்டும் வழங்கிவிட்டு, ஸ்கூட்டரை, தகுதியற்ற வேறு நபருக்கு வழங்குவது போன்ற முறைகேடுகளின்றி, பயனாளிகளுக்கான ஸ்கூட்டரை உரிய காலத்துக்குள் வழங்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்பட மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.