ADDED : பிப் 10, 2026 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: கலெக்டர் மனிஷ்நாரணவரே அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், அலிம்கோ நிறுவனம் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பொருட்டு, திருப்பூர் மாவட்டத்தில் 12ம் தேதி உடுமலையில் உள்ள தேஜஸ் மஹாலில், 13ம் தேதி தாராபுரம் வேலவர் திருமண மண்டபத்தில் மற்றும் 14ம் தேதி திருப்பூர் பாண்டியன் நகரில், காலை, 10:00 முதல்மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்று, தங்களது அடையாள அட்டை, ஆதார் கார்டு, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் நான்கு போட்டோ, அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

