/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்நாட்டு ஆடை தொழில் துறைக்கு நன்மை: உற்பத்தி மதிப்பு கண்டறிய முனைப்பு
/
உள்நாட்டு ஆடை தொழில் துறைக்கு நன்மை: உற்பத்தி மதிப்பு கண்டறிய முனைப்பு
உள்நாட்டு ஆடை தொழில் துறைக்கு நன்மை: உற்பத்தி மதிப்பு கண்டறிய முனைப்பு
உள்நாட்டு ஆடை தொழில் துறைக்கு நன்மை: உற்பத்தி மதிப்பு கண்டறிய முனைப்பு
ADDED : அக் 11, 2025 11:19 PM

திருப்பூர்: உள்நாட்டு பின்ன லாடை தொழில் துறை யினர் நன்மைகளைப் பெறுவதற்காக, திருப் பூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியின் மதிப்பை முறையாகவும், துல்லியமாகவும் கணக்கிடு வதற்கான முனைப் பில், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) களமிறங்கியுள்ளது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தால், நாட்டுக்கு அன்னிய செலாவணி கிடைக்கிறது. இதேபோல், உள்நாட்டு வர்த்தகம் வாயிலாக, ஜி.எஸ்.டி., வருவாய் கிடைக்கிறது. ஏற்றுமதி வர்த்தகம், சட்டப்பூர்வமான வழிகாட்டுதலுடன் நடக்கிறது.
ஒவ்வொரு மாதமும் நடக்கும், ஏற்றுமதி தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிடுகிறது. உள்நாட்டு விற்பனைக்கான பின்னலாடை உற்பத்தி ஆண்டு முழுவதும் நடந்தாலும், அவற்றை உறுதிபட கணக்கிடுவதற்கான முயற்சி, இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) புதிய நிர்வாகக்குழு பதவியேற்பு விழாவில் பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், ''ஏற்றுமதி வர்த்தகம், 44 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறுவது போல், சரியான புள்ளிவிவரங்களுடன் உள்நாட்டு வர்த்தகத்தை கணக்கிட முயற்சிக்க வேண்டும்,'' என வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகக்குழுவும், சட்டப்பூர்வ தகவல்கள் அடிப்படையில், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி மற்றும் வர்த்தக மதிப்பீடுகளை தயாரிக்க களமிறங்கியுள்ளது. அதற்காக, முன்னணி ஆடிட்டர்கள் மற்றும் வரி பயிற்சியாளர்களுடன் கலந்தாய்வு நடந்து வருகிறது.
குறிப்பாக, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், அனைத்து வகை நடவடிக்கைகளும் டிஜிட்டல்மயமாகிவிட்டது.
வரி வருவாய் விவரத்தையும் துறைவாயிலாக பெறலாம். அதன்படி, திருப்பூரில் உள்ள நிறுவனங்கள் வாயிலாக கிடைக்கும் மொத்த வரி வருவாய் அடிப்படையில், உற்பத்தி மதிப்பை உறுதியாகவும், துல்லியமாகவும் தயாரிக்க, 'சைமா' குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இது, தொழில்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவும்.
கூட்டு முயற்சி ஏற்றுமதி வர்த்தக மதிப்பை எளிதாக கணக்கிட முடியும். உள்நாட்டு விற்பனைக்கான உற்பத்தி மற்றும் வர்த்தக மதிப்பை கணக்கிடுவது சிரமம். திருப்பூரில் உற்பத்தி செய்யும் வெளிமாநில நிறுவனங்கள், உற்பத்தி மதிப்பை, அவரவர் மாநிலங்களில் கணக்கு காண்பித்து வரி செலுத்துகின்றனர். இதுபோன்ற கணக்குகளை பெற்று, கணக்கிட வேண்டியுள்ளது.
பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் சில, தங்கள் பரிவர்த்தனை விவரங்களை வெளியிட தயக்கம் காட்டுகின்றன. அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஜி.எஸ்.டி., உயர் அதிகாரிகளை சந்தித்து பேசி, இதுதொடர்பான விவரங்களை கேட்டறிய திட்டமிட்டுள்ளோம். உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி மற்றும் விற்பனை விவரத்துடன் ஜி.எஸ்.டி., செலுத்தப்படுகிறது.
அதனடிப்படையில் கணக்கிட்டால், திருப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரங்களை சட்டப்பூர்வமாக கணக்கிட முடியும். அப்போதுதான், எத்தகைய பிரச்னை அல்லது தேவைகளாக இருந்தாலும், மத்திய, மாநில அரசுகளிடம் முறையிட ஏதுவாக இருக்கும். ஒட்டுமொத்த தொழில்துறையின் நன்மைக்காக, கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
- சண்முகசுந்தரம், தலைவர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா).