/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே சரக்கு முனையம் சீரமைப்பு பணி நுாற்றாண்டு கட்டடங்கள் இடிப்பு
/
ரயில்வே சரக்கு முனையம் சீரமைப்பு பணி நுாற்றாண்டு கட்டடங்கள் இடிப்பு
ரயில்வே சரக்கு முனையம் சீரமைப்பு பணி நுாற்றாண்டு கட்டடங்கள் இடிப்பு
ரயில்வே சரக்கு முனையம் சீரமைப்பு பணி நுாற்றாண்டு கட்டடங்கள் இடிப்பு
ADDED : அக் 11, 2025 11:18 PM

திருப்பூர்: மத்திய அரசின் 'கதி சக்தி' திட்டத்தில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் சரக்கு முனையம் (கூட்ஸ்ெஷட்) சீரமைப்பு பணி துவங்கியது.
சரக்கு ரயில் இயக்கம், சரக்கு கையாளுதல் மூலம் அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில்வே ஸ்டேஷன்களின் கூட்ஸ்ெஷட்களை (சரக்கு முனையம்) மேம்படுத்த தெற்கு ரயில்வே முடிவெடுத்தது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட திருப்பூர், வஞ்சிபாளையம் உட்பட, 14 ஸ்டேஷன்கள் இத்திட்டத்தில் தேர்வாகியுள்ளன.
'கதி சக்தி' திட்டத்தின் கீழ் வஞ்சிபாளையத்துக்கு, பத்து கோடி ரூபாயும், திருப்பூருக்கு மூன்று கோடி ரூபாயும் முதல் கட்ட பணிகளுக்கான தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. வஞ்சிபாளையத்தில் பணிகள் முடிந்து சரக்கு முனையம் திறக்கப்பட்டுள்ளது; முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பழைய கூட்ஸ்ெஷட் கட்டடம், சரக்கு முன்பதிவு மையம், சரக்கு இருப்பு வைக்கும் அறை உள்ளிட்டவற்றை இடித்து விட்டு, விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணி துவங்க சேலம் ரயில்வே கோட்டம் முடிவு செய்தது.
ஈரோடு - கோவை வழித்தடத்தில், 1920 முதல் ரயில் இயக்கம் துவங்கப்பட்டது. சரக்கு ரயில்கள் நின்று, சரக்குகளை ஏற்றி, இறக்கும் நடைமுறை அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே(1915ம் ஆண்டு) துவங்கியது. பல லட்சம் டன் மக்காச்சோளம், சோளம், சோயாபுண்ணாக்கு, அரிசி, கோதுமை, தானியங்கள் இந்த சரக்கு முனையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நுாற்றுக்கணக்கான லாரிகள் மூலம், 500க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர் வாழ்வாதாரம் பெற்று வந்தனர். இந்நிலையில், கூட்ஸ்ெஷட் மேற்கூரையைப் பிரித்து, பொக்லைன் மூலம் இடித்து அகற்றும் பணி நேற்று துவங்கியது.