/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரயில்
/
பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரயில்
ADDED : மார் 18, 2024 12:21 AM
திருப்பூர்:பயணிகள் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு சனிக்கிழமைகளில் (மார்ச், 23 மற்றும் 30) சிறப்பு ரயில் (எண்:06555) இயக்கப்படும். இரவு, 11:55க்கு புறப்படும் ரயில், மறுநாள் இரவு, 7:40 மணிக்கு கொச்சுவேலி வந்தடையும். மறுமார்க்கமாக திங்கள் தோறும் (மார்ச், 24 மற்றும் 31) இரவு, 10:00க்கு கொச்சுவேலியில் புறப்படும் ரயில் (எண்:06556) மறுநாள் மாலை, 4:30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோட்டில் நின்று செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இரு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது.

