/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
/
பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
ADDED : மார் 19, 2024 10:56 PM

உடுமலை:உடுமலை, சங்கிலி வீதி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா, துவங்கியது.
உடுமலை நகராட்சி, சங்கிலி வீதியிலுள்ள, பத்ரகாளியம்மன் கோவில், நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி, கடந்த, 12ம் தேதி துவங்கியது. கடந்த 17ல் கருப்பண்ணசுவாமி பூஜை நடந்தது.
நேற்றுமுன்தினம் , திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு, யூனியன் ஆபீஸ் காமாட்சி அம்மன் கோவிலிலிருந்து, தீர்த்த கலசங்களை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
நேற்று காலை, 9:30 மணிக்கு கொடியேற்றுதல், காப்புக்கட்டுதல், முளைப்பாலிகையிடுதல், மாலை, 6:00 மணிக்கு கும்பம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.
வரும், 23ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு பூவோடு எடுத்தல், பத்ரகாளி அம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.
வரும், 25ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவம், திருவீதி உலா, வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
26ம் தேதி, மாலை, கொடி இறக்குதல், கும்பம் விடுதல், முளைப்பாலிகை விடுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 27ம் தேதி, மஞ்சள் நீராட்டு, மகா அபிஷேகம் இடம்பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை, உடுமலை நாடார் உறவின் முறையார் சங்கம், நாடார் மகளிர் அணி, நாடார் இளைஞர் அணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

