/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பரதம் கலை மட்டுமல்ல: தொழில் கல்வியும் தான்!
/
பரதம் கலை மட்டுமல்ல: தொழில் கல்வியும் தான்!
ADDED : மார் 08, 2024 01:33 AM

கவிநயா நாட்டியாலயா நடனப்பள்ளி நிறுவனர் மேனகா.அவர் கூறியதாவது:
கடந்த, 2003ல், ஒரே ஒரு மாணவியுடன் நடனப்பள்ளி துவக்கி, இன்று, 300 மாணவிகளுடன் செயல்பட்டு வருகிறோம்; ஏராளமான நடன கலைஞர்களை உருவாக்கி வருகிறோம்.
கொரோனாவுக்கு பின், பரதம் கற்றுக் கொள்வதில், ஆர்வம் அதிகரித்திருக்கிறது. கலை மட்டும் தான், மனதை செம்மைப்படுத்தும், நேர்வழிப்படுத்தும் என்பதை மக்கள் உணர்ந்திருப்பது தான், இதற்கு காரணம்.
தற்போது சரித்திர கதைகளை நடன வடிவில், தத்ரூபமாக வழங்கி வருகிறோம்; இது, பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. இதன் வாயிலாக, சரித்திர கதைகள் சொல்லும் நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்ட பண்புகளை மக்கள் மத்தியில் மேம்பட செய்வதே எங்களின் நோக்கம்.
பல்வேறு துறைகளில் சாதிக்கும் பெண்கள், இதுபோன்ற நடனக்கலையிலும், உலகளவில் பிரபலமாகி வருகின்றனர். முக்கியமாக, தங்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும், குருவின் பின்னணி அறிந்துக் கொள்வது முக்கியம். உடல், மனதை என்றும் இளமையாக வைத்துக் கொள்ளும் பரதம், கலை மட்டுமின்றி, அதை நல்ல முறையில் கற்றுத் தேர்ந்த பின், தொழில் கல்வியாகவும் பயன்படுத்தி, வருமானம் ஈட்ட முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

