/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாரதி மெட்ரிக் பள்ளி தடகளத்தில் சாம்பியன்
/
பாரதி மெட்ரிக் பள்ளி தடகளத்தில் சாம்பியன்
ADDED : ஆக 08, 2025 11:48 PM

திருப்பூர்:
பெருந்துறை குறுமைய குடியரசு நாள் தடகள போட்டி, விஜயமங்கலம், பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 4ல் துவங்கி 6ம் தேதி வரை நடைபெற்றது.
பரிசளிப்பு விழாவில் கோவை ராயல் கேர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மாதேஸ்வரன் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
பாரதி மெட்ரிக் பள்ளியை சேர்ந்த கவிஸ்ரீ, பெண்களுக்கான இளையோர் பிரிவிலும், கிரிஸ்தனா, மூத்தோர் பிரிவிலும், நிஷாந்த், மாணவர் இளையோர் பிரிவிலும், பிரணவ், நவீன், சித்தார்த், ஹரீஸ் ஆகியோர் மிக மூத்தோர் பிரிவிலும் அதிக புள்ளிகள் பெற்று, தனிநபர் சாம்பியன் பெற்றனர்.
மாணவ, மாணவியர் என இரு பிரிவிலும் அதிக புள்ளிகளை பெற்று, விஜயமங்கலம் பாரதி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டினர்.
பெருந்துறை குறுமைய ஒருங்கிணைப்பாளர் முகாசிபிடாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குமார் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். முகாசி பிடரியூர் அரசு அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.