/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாரதியார் பிறந்த நாள் விழா; மாணவர்களுக்கு போட்டி
/
பாரதியார் பிறந்த நாள் விழா; மாணவர்களுக்கு போட்டி
ADDED : டிச 12, 2024 05:51 AM
உடுமலை ; பூலாங்கிணர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பூலாங்கிணர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவி இந்துஜா வரவேற்றார்.
பள்ளி தலைமையாசிரியர் விமலா தலைமை வகித்தார். பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சரவணன், 'பாரதியின் வாழ்வும் வரலாறும்' என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து பாரதியார் இதழியல் துறையில் செய்த பணிகள், தமிழ் மொழி மீது அவர் கொண்ட பற்று குறித்து, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
மாணவர்கள் பாரதியார் உருவ படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாணவியர் பாரதியாரின் பாடல்களை பாடினர். போட்டிகள் நடத்தப்பட்டது.
உதவி தலைமையாசிரியர் சுதா மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாணவி சரண்யா நன்றி தெரிவித்தார்.