/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு
/
பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு
ADDED : டிச 11, 2025 06:36 AM
புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம், 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையின் பிரதான நீர் பிடிப்பு பகுதியாக, நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீர்-பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கடந்த அக்டோ-பரில் அணை நீர்மட்டம், 103 அடியை எட்டியது. தற்போது மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து, 527 கன அடியாக இருந்தது. அதே சமயம் அணையில் இருந்து, பாச-னத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்-ணீரும், அரக்கன் கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு, 350 கன அடி தண்ணீரும், குடிநீர் தேவைக்காக, 100 கன அடி தண்ணீரும் என மொத்தம், 2,750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 101.80 அடியாகவும், நீர் இருப்பு 30.1 டி.எம்.சி.,யாகவும் இருந்-தது. அணைக்கு வரும் நீர் வரத்தை விட, திறப்பு அதிகமாக உள்-ளதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

