/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமுதா பள்ளி மாணவியர் இருவர் கையுந்து பந்து போட்டியில் அசத்தல்
/
குமுதா பள்ளி மாணவியர் இருவர் கையுந்து பந்து போட்டியில் அசத்தல்
குமுதா பள்ளி மாணவியர் இருவர் கையுந்து பந்து போட்டியில் அசத்தல்
குமுதா பள்ளி மாணவியர் இருவர் கையுந்து பந்து போட்டியில் அசத்தல்
ADDED : டிச 11, 2025 06:36 AM
ஈரோடு: இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும், பள்ளிகளுக்-கிடையே தேசிய அளவிலான 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்-கான கையுந்து பந்து போட்டி, அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூரில் நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவியர் கலந்து கொண்ட போட்டியில், தமிழ்நாடு அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
தமிழ்நாடு அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடிய, குமுதா பள்ளியின் பிளஸ் 2 மாணவி ப்ரீத்தி, தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 14 வயதிற்குட்பட்ட கையுந்து பந்து போட்-டியில், தமிழக அணிக்காக விளையாடுவதற்கான தேர்வு போட்டி, நாகப்பட்டினத்தில் நடந்தது. இதில், குமுதா பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி ஆதிரா, தமிழக அணிக்காக தேர்வு செய்யப்-பட்டு தேசிய அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இதைய-டுத்து ஜன., 5 முதல் 9 வரை ஆந்திர மாநிலம், கடப்பாவில் நடைபெறும் போட்டியில் விளையாட உள்ளார்.தேசிய அளவில் வெற்றி பெற்ற குமுதா பள்ளி மாணவி மற்றும் தமிழக அணிக்காக தேசிய அளவில் விளையாட தகுதி பெற்ற மாணவி ஆகியோரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளி செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபி-ரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியர், ஆசிரி-யர்கள் பாராட்டினர்.

