ADDED : நவ 07, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, அண்ணா நகர், 3வது வீதியில் கான்கிரீட் சாலை அமைக்க, திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ தனது தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து, 7.14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதனையொட்டி, சாலை அமைக்க பூமி பூஜை நேற்று நடைபெற்றது. எம்.எல்.ஏ விஜயகுமார், பணியை துவக்கி வைத்தார்.
அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சங்கீதா, ஒன்றிய துனை செயலாளர் முருகேசன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட பேரவை இணை செயலாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

