ADDED : பிப் 12, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசி மோட்டார் வாகன ஆய்வாளருக்கான வட்டாரப் போக்குவரத்து அலுவலக அடிக்கல் நாட்டு விழா நடந்தது; தொடர்ந்து, அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் கொடையாளர்கள் பழனிச்சாமி, சுப்பிரமணி, வழக்கறிஞர் பிரபு ஆகியோர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கு தானமாக கொடுத்த இரண்டு ஏக்கர் நிலத்தில் பூமி பூஜை நடந்தது.
திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர்கள் பாஸ்கர், ஈஸ்வரன், கணேஷ்ராம் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சாந்தி, நிலக் கொடையாளர்கள் பங்கேற்றனர்.