/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பைக் டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன் பொதுக்குழு
/
பைக் டெக்னீஷியன்ஸ் அசோசியேஷன் பொதுக்குழு
ADDED : நவ 25, 2024 11:00 PM

அவிநாசி; அவிநாசி பைக் டெக்னீசியன்ஸ் அசோசியேஷன் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு நிறுவனத் தலைவர் திவாகரசாமி தலைமை வகித்தார். செயலாளர் சிவசங்கர், பொருளாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் நடராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் குழந்தைவேல், மாநில பொதுச் செயலாளர் சண்முகம், மாநில பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்றனர்.
மோட்டார் வாகன தொழிலாளர் இறப்பு நிதியாக, 5 லட்சம் ரூபாயை மாநில அரசு வழங்க வேண்டும். மோட்டார் தொழிலாளர்களுக்கான தனி நல வாரியம் அமைக்க வேண்டும். புதிய வரவாக மோட்டார் தொழிலில் பிஎஸ் - 6, தொழில்நுட்பம் மாறி உள்ளதால், இருசக்கர வாகன மெக்கானிக் ஊழியர்களுக்கு மாநில அரசு சார்பில், இலவச பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் மாநில துணை செயலாளர்கள் நாகராஜ், ஆனந்த், மாவட்ட தலைவர் சண்முகம், செயற்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், துணைத் தலைவர் ராம்குமார், துணை செயலாளர் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினர். அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட டூ வீலர் மெக்கானிக்ஸ், இரு சக்கர வாகனங்களின் உதிரிபாக கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

