/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீ விபத்தால் பாதிக்கப்படும் பல்லுயிர் பெருக்கம்
/
தீ விபத்தால் பாதிக்கப்படும் பல்லுயிர் பெருக்கம்
ADDED : ஏப் 02, 2025 07:12 AM

பல்லடம் : வனப்பகுதிகளில் உள்ள செடி கொடிகள், புற்கள் உள்ளிட்டவை, வெயிலின் தாக்கம் காரணமாக, காய்ந்து கருகி காணப்படுகின்றன. இவற்றில் தீப்பற்றினால், காட்டுத் தீயாக மாறி, ஒட்டுமொத்த வனப்பகுதியையும் அழிகிறது. இதனால், வனப்பகுதிகளில் உள்ள மரங்கள், செடி கொடிகள், புதர்கள் உள்ளிட்டவற்றை நம்பி வாழும் உயிரினங்கள் பலியாகின்றன.
பெரும்பாலும் இது போன்ற தீ விபத்து, மனித தவறுகளால் ஏற்பட்டு, எத்தனையோ உயிரினங்கள் பலியாகின்றன. இதனால், பல்லுயிர் பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நாம் வாழும் இந்த பூமியானது, மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்குமானது. நாம் வாழ்வதற்காக பல்லுயிர் பெருக்கத்தை அழிப்பது என்பது முறையற்றது. எனவே, தீ விபத்து ஏற்படுத்தாமல் உறுதுணையாக இருக்க வேண்டும்.

