sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மலைப்பிரதேச பறவை 'விசிட்!'  பறவை ஆர்வலர்கள் வியப்பு

/

 மலைப்பிரதேச பறவை 'விசிட்!'  பறவை ஆர்வலர்கள் வியப்பு

 மலைப்பிரதேச பறவை 'விசிட்!'  பறவை ஆர்வலர்கள் வியப்பு

 மலைப்பிரதேச பறவை 'விசிட்!'  பறவை ஆர்வலர்கள் வியப்பு


ADDED : நவ 19, 2025 04:46 AM

Google News

ADDED : நவ 19, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மலை, வனம், குளம், குட்டை உள்ளிட்ட மனித இடர்பாடு இல்லாத, இயற்கையின் இதம் நிறைந்த இடங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து வரும் பறவைகளின் வலசை காலம் இது.

பரபரப்பான தொழில் நகரின் மத்தியில் அமைந்துள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், மாணிக்காபுரம் குளம் உள்ளிட்ட நீர்நிலை நிறைந்த பகுதிகளில், வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து செல்கின்றன. இந்நிலையில், குடியிருப்புகளும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த சேரன் தொழிலாளர் நகரில், வலசை பறவையை கண்டுள்ளனர், திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி, என்.எஸ்.எஸ்., அலகு 2 மாணவர்கள்.என்.எஸ்.எஸ்., பணியில் ஒரு அங்கமாக திருப்பூர் வனத்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பறவை நோக்கில், அவற்றின் கணக்கீடு தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், சேரன் தொழிலாளர் காலனியில் உள் மரத்தில் வலசை வரும் அரிய வகை பறவையான 'நீலமேனி ஈ பிடிப்பான்' எனப்படும், 'வெர்டிடர் ப்ளைகேட்சர்' என்ற பறவையை கண்டுள்ளார்.

''இவ்வகையான பறவைகள், இமயமலை அடிவாரத்தில் வசிப்பவை. பெரும்பாலும், மேற்கு தொடர்ச்சி மலை போன்ற மலைப்பாங்கான இடங்களுக்கு தான் அவை வலசை செல்வது வழக்கம். இருப்பினும், திருப்பூரின் நகரப்பகுதியில் அவ்வகை பறவைகள் தென்பட்டிருப்பது, வியப்பளிக்கிறது'' என்றார் மோகன்குமார். கடந்த, 2022ல் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் இவ்வகை பறவை தென்பட்டது, குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us