ADDED : நவ 19, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம், மாணிக்காபுரம் ரோடு, சிவசக்தி நகரை சேர்ந்தவர் லோகநாதன், 37. ஹிந்து முன்னணி முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர். மனைவி சரண்யா, 31 மற்றும் மகன் ரிதன் 4 ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, இயற்கை உபாதை கழிக்க, வெளியே சென்ற லோகநாதன், கால் தவறி, வீட்டின் அருகில் உள்ள பயன்பாடற்ற, 70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தார். தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், அவரை சடலமாக மீட்டனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

