/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொது கழிப்பிடம் டெண்டர் கலெக்டரிடம் பா.ஜ., மனு
/
பொது கழிப்பிடம் டெண்டர் கலெக்டரிடம் பா.ஜ., மனு
ADDED : ஜன 09, 2024 12:33 AM
திருப்பூர்;பா.ஜ., திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தலைமையில், துணை தலைவர் காசிராஜன், பொது செயலாளர் குமார் உட்பட நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனு விவரம்:
பெருமாநல்லுார் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடம், பத்து மாதங்களாக பயன்பாட்டில் உள்ளது. டென்டர் விடவில்லை. தினமும், 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும் கட்டண தொகை, தனி நபருக்கு செல்கிறது.
இதுகுறித்து, ஏற்கனவே டிச., மாதம், கலெக்டரிடம் மனு அளித்தும் பலனில்லை. அரசுக்கு தொடர்ந்து வருவாய் இழப்பை ஏற்படுத்தும் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் அதிகாரிகள், கழிப்பிட கட்டண வசூல் கணக்கு விவரங்களை இதுவரை அளிக்கவில்லை.
அதேபோல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோக தொகையும் சிலருக்கு செல்கிறது. பொது கழிப்பிடம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகத்துக்கு டென்டர்விடவேண்டும். ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.