
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. இப்பணிக்கு வலு சேர்க்கும் விதமாக, மாவட்ட அளவிலான, தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பயிலரங்கம் நேற்று மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார்.தீவிர உறுப்பினர் சேர்க்கையின் அவசியம், கட்சியின் கொள்கைகள், சிறப்புகள், பிரதமர் வழங்கி வரும் சிறப்பு திட்டங்கள், மக்களுக்கு ஏற்பட்டு வரும் நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி, கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டது.
மாநில பொறுப்பாளர் நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் 'பாயின்ட்' மணி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, பொது செயலாளர்கள் சீனிவாசன், பாலசுப்ரமணி உட்பட பலர் பேசினர். மாநில, மாவட்ட மற்றும் மண்டல அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.