/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டாசு கடை அமைக்க கெடுபிடி தளர்த்த பா.ஜ., வேண்டுகோள்
/
பட்டாசு கடை அமைக்க கெடுபிடி தளர்த்த பா.ஜ., வேண்டுகோள்
பட்டாசு கடை அமைக்க கெடுபிடி தளர்த்த பா.ஜ., வேண்டுகோள்
பட்டாசு கடை அமைக்க கெடுபிடி தளர்த்த பா.ஜ., வேண்டுகோள்
ADDED : அக் 23, 2024 06:28 AM
திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில், பட்டாசு கடை அமைக்க கெடுபிடியாக இருப்பதால், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே, இதை தளர்த்தி அனுமதி வழங்க வேண்டும் என்று பா.ஜ., மாவட்ட தலைவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இது குறித்து, பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் கலெக்டர், கமிஷனர் உள்ளிட்டோரிடம் அளித்த கோரிக்கை மனு:
ஹிந்து மக்கள் மட்டுமின்றி, அனைத்து சமுதாய மக்களும் குறிப்பாக, குழந்தைகள் குதுாகலமாக தீபாவளியை கொண்டாடுவர். இதன் முக்கிய நிகழ்வான பட்டாசு விற்பனை செய்யும் கடைகளுக்கு, இம்முறை பல கெடுபிடிகள் விதிப்பதோடு வரலாறு காணாத வகையில் வருவாய்த்துறை, போலீசார், தீயணைப்பு துறை, மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் பணமாகவும் மற்றும் பட்டாசுகள் அதிகளவில் கேட்டு தொல்லை கொடுப்பதாக வியாபாரம் செய்ய முடியாத சூழல் நிலவுவதாக வியாபாரிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
எனவே, உரிய பாதுகாப்புடன் அனைத்து விதமான கோர்ட் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வியாபாரிகள் கடை நடத்த உரிய அனுமதியை அரசாங்கத்தின் அனைத்து துறை அதிகாரிகளும், எந்தவிதமான ஆதாயமும் எதிர்பாராமல் வழங்க வேண்டும். கடை நடத்துகின்ற வியாபாரிகள் சிறு மற்றும் விழாகால வியாபாரிகள் என்பதை அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும். தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

