/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்ணில் கருப்பு துணி கட்டி பா.ஜ., கவுன்சிலர் வெளிநடப்பு
/
கண்ணில் கருப்பு துணி கட்டி பா.ஜ., கவுன்சிலர் வெளிநடப்பு
கண்ணில் கருப்பு துணி கட்டி பா.ஜ., கவுன்சிலர் வெளிநடப்பு
கண்ணில் கருப்பு துணி கட்டி பா.ஜ., கவுன்சிலர் வெளிநடப்பு
ADDED : டிச 31, 2024 06:50 AM

பல்லடம் : -பல்லடம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், அதன் தலைவர் கவிதாமணி தலைமையில் நேற்று நடந்தது. முன்னதாக, அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, 18வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் சசிரேகா, கண்ணில் கருப்பு துணி கட்டி, கையில் கண்டன அறிவிப்பு பதாகையை ஏந்தி, கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
இவருடன், 7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கனகுமணியும் வெளியேறினார்.
சசிரேகா கூறுகையில், 'சென்னை அண்ணா பல்கலை மாணவி பலாத் காரம் செய்யப்பட்டுள்ளார். இதே நிலை நீடித்தால், வரும் காலத்தில் பெண் குழந்தைகளே இருக்க மாட்டார்கள். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும். இனிமேல் இது போன்ற ஒரு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும்,' என்றார்.