/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடத்தில் ஆதார் மையங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய பா.ஜ.,
/
பல்லடத்தில் ஆதார் மையங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய பா.ஜ.,
பல்லடத்தில் ஆதார் மையங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய பா.ஜ.,
பல்லடத்தில் ஆதார் மையங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய பா.ஜ.,
ADDED : ஆக 02, 2025 11:27 PM

பல்லடம்: பல்லடம் தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், தபால் அலுவலகம், மேற்கு பல்லடம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம், இந்தியன் வங்கி, டி.எம்.பி., ஆகிய இடங்களிலும் ஆதார் மையங்கள் செயல்படுகின்றன.
பல்லடத்தில் 7 ஆதார் மையங்கள் செயல்படுவது குறித்து நகர பா.ஜ., நிர்வாகிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பா.ஜ.,வினர் ஆய்வு மேற்கொண்டதையடுத்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு, ஆதார் பதிவு மையம் செயல்படுவது குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'ஏழு ஆதார் மையங்கள் செயல்படுவது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியதால், தற்போது, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆதார் மையங்களில் கூட்ட நெரிசல் குறைந்துள்ளது. மேலும், ஆதார் மையங்களில் சிலவற்றில் யு.பி.எஸ்., வசதி இல்லாததால், பணிகளில் இடையூறு ஏற்படுகிறது. அனைத்து ஆதார் மையங்களிலும் யு.பி.எஸ்., வசதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.