/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கிரஸ் நிர்வாகி மீது போலீசில் பா.ஜ., புகார்
/
காங்கிரஸ் நிர்வாகி மீது போலீசில் பா.ஜ., புகார்
ADDED : ஆக 15, 2025 11:44 PM

அவிநாசி,; அவிநாசியில் உள்ள பழனியப்பா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதையறிந்த அவிநாசியை சேர்ந்த, காங்., மாநில தகவல் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைப்பாளர் நவநீதகண்ணன், 45, என்பவர், சமூக வலைதளங்களில், சண்முகநாதன் குறித்து அவதுாறாக பதிவிட்டார்.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ. தலைவர் மாரிமுத்து, நகர ரமேஷ் ஆகியோர் தலைமையில், மாவட்டத் துணைத் தலைவர்கள் சண்முகம், முருகேசன், கணியாம்பூண்டி செந்தில் உள்ளிட்டோர் அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபிரபுவிடம் புகார் அளித்தனர்.
அதில், ஆதாரமற்ற குற்றச்சாட்டை, முன்னாள் கவர்னர் மீது பரப்பிய நவநீதகண்ணன் மீதுநடவடிக்கை எடுத்து, அவரது முகநுால் பதிவுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்தனர்.