/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ. பொதுக்கூட்டத்துக்கு விதைப்பந்து கொடுத்து அழைப்பு
/
பா.ஜ. பொதுக்கூட்டத்துக்கு விதைப்பந்து கொடுத்து அழைப்பு
பா.ஜ. பொதுக்கூட்டத்துக்கு விதைப்பந்து கொடுத்து அழைப்பு
பா.ஜ. பொதுக்கூட்டத்துக்கு விதைப்பந்து கொடுத்து அழைப்பு
ADDED : நவ 05, 2025 12:12 AM

அவிநாசி: கோவை வடக்கு மாவட்ட பா.ஜ. வழக்கறிஞர் பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு விதைப்பந்து கொடுத்து பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்,' என்ற தலைப்பில், அவிநாசி நகராட்சி, மேற்கு ரத வீதியில் இன்று பா.ஜ. பொதுக்கூட்டம் நடக்கிறது. கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றுகிறார்.
இதனை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில், பொதுமக்களுக்கு விதைப்பந்து மற்றும் விசிட்டிங் கார்டு அளவில் அச்சடிக்கப்பட்ட கார்டு கொடுத்து அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மாரிமுத்து, தொகுதி பொறுப்பாளர் ஜெகநாதன், இணை பொறுப்பாளர் கதிர்வேலன்மாணிக்கம், பொதுச் செயலாளர் பிரியதர்ஷினி, துணை தலைவர் சண்முகம், வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் குமார், சோமசுந்தரம், கார்த்திகேயன், ஜனனி மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டச் செயலாளர் பிரபு, முன்னாள் தலைவர் கணேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

