ADDED : நவ 05, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: பள்ளிக்கல்வி இயக்குனர் மாநிலம் முழுதும் 11 கல்வி அலுவலர்களுக்கு பணி மாறுதல் வழங்கியும், 26 முதன்மை மாவட்ட கல்வி அலுவர்களுக்கு பணி உயர்வு வழங்கியும் நேற்று உத்தரவிட்டார்.
அதன்படி, திருப்பூர் மாவட்ட (தொடக்க) கல்வி இயக்குனராக இருந்த ராஜூ, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணி உயர்வு பெற்று சென்றார். கோவை மாவட்ட (தனியார் பள்ளிகள்) கல்வி அலுவலர் புனித அந்தோனியம்மாள், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பு வகித்து வந்த காளிமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்தில் தொடர்கிறார்.

