/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுதோறும் மூவர்ண கொடி: பா.ஜ., கூட்டத்தில் முடிவு
/
வீடுதோறும் மூவர்ண கொடி: பா.ஜ., கூட்டத்தில் முடிவு
ADDED : ஆக 08, 2025 11:47 PM
திருப்பூர்:
சுதந்திர தின விழா வரும், 10 முதல் 15ம் தேதி வரை கொண்டாட திருப்பூர் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் சீனிவாசன் தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. பொது செயலாளர் அருண், பொருளாளர் ரவி முன்னிலை வகித்தனர். மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, நாளை (10ம் தேதி) முதல் 15ம் தேதி வரை விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும், 19 மண்டலங்களில், 1,049 பூத்களிலும் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுவது, அனைத்து மண்டலங்களிலும், தேசியக் கொடி ஏந்தி பேரணி நடத்துவது, சுதந்திர போராட்ட தியாகிகள் சிலை சுத்தம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, மாவட்ட அளவில் பிரமாண்ட ஊர்வலம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.