/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் கரையோரம் மண் திருட்டு ஜோ;ர் வாகனத்தை முற்றுகையிட்ட பா.ஜ.,வினர்
/
நொய்யல் கரையோரம் மண் திருட்டு ஜோ;ர் வாகனத்தை முற்றுகையிட்ட பா.ஜ.,வினர்
நொய்யல் கரையோரம் மண் திருட்டு ஜோ;ர் வாகனத்தை முற்றுகையிட்ட பா.ஜ.,வினர்
நொய்யல் கரையோரம் மண் திருட்டு ஜோ;ர் வாகனத்தை முற்றுகையிட்ட பா.ஜ.,வினர்
ADDED : மே 27, 2025 11:37 PM

திருப்பூர் : திருப்பூரில் நொய்யல் கரையோரம் சட்ட விரோத மாக மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., வினர் முற்றுகையிட்டனர்.
திருப்பூர், அணைக்காடு, என்.ஜி.ஆர்., நகரில் மின் மயானம் ரிங் ரோட்டில் நொய்யல் கரையையொட்டி முறையாக அனுமதியில்லாமல் பொக்லைன் மூலம் சிலர் மண் எடுத்து வந்தனர்.
இதையறிந்த மாவட்ட பொது செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பா.ஜ.,வினர், வாகனத்தை முற்றுகையிட்டு மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்பூர் வடக்கு போலீசார் பேச்சு நடத்தினர். 'ஆற்றையொட்டி சட்டவிரோதமாக மண் எடுப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.
அந்த இடத்துக்கு சென்ற திருப்பூர் வடக்கு தாசில்தார் கதிர்வேல் விசாரணை நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரிடம், ''மண் எடுக்கப்படாது, இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர்.
அனுமதி பெறவில்லை
காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழியில் கொட்டுவதற்காக மின் மயானம் அருகே மண் எடுக்கப்பட்டுள்ளது. மண் எடுத்த ஒப்பந்த தாரர் வருவாய்த்துறையிடம் முறையாக அனுமதியில்லாமல், மண் எடுத்தது தெரியவந்தது. உடனடியாக பணிகள் நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக தாசில்தார், ஆர்.ஐ., கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரித்து, ஆர்.டி.ஓ.,வுக்கு அறிக்கை அனுப்ப உள்ளனர்.
- போலீசார்