/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைப்பு சீரமைக்க மெத்தனம் அதிகாரியை கண்டித்து பா.ஜ., போராட்டம்

ADDED : ஏப் 02, 2025 07:11 AM
திருப்பூர் : குழாய் உடைப்பை சீரமைக்காமல் மெத்தனமாக இருந்த அதிகாரிகளைக் கண்டித்து பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாகராட்சி, 43வது வார்டுக்கு உட்பட்ட மங்கலம் ரோட்டில், மாகாளியம்மன் கோவில் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், கடந்த இரண்டு சுற்றுகளாக குடிநீர் சப்ளை செய்யப்பட்ட போது, குடிநீர் கிடைக்கவில்லை. குழாய் உடைப்பு சரி செய்ய கோரிக்கை விடுத்தும், குடிநீர் வழங்கல் பிரிவினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆவேசமடைந்த அப்பகுதியினர், முன்னாள் பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்வேல், கருவம்பாளையம் மண்டல தலைவர் சங்கர் ஆகியோர் தலைமையில், திரண்டு, மாநகராட்சி அலுவலர்களின் மெத்தனத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து மாநகராட்சி குடிநீர் பிரிவினர்,குழாய் உடைப்பை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.