/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 21, 2025 11:46 PM

அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாக முறை கேடுகளை கண்டித்து கையில் திருவோடு ஏந்தி நகராட்சி அலுவலகம் எதிரில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்து பேசுகையில், ''திருமுருகன் பூண்டி நகராட்சி நிர்வாகத்தில் மக்கள் நலத்திட்ட பணிகள் என்று செய்யப்படும் அனைத்துத் திட்டங்களிலும் மாபெரும் ஊழல் நடைபெறுகிறது.
இதனை நகராட்சி தலைவர், துணைத் தலைவர் என கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் கூட்டாக மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். நகராட்சியில் பிரதான குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் தரமான பைப்புகளை பயன்படுத்தாமல் தரம் குறைவான பைப்புகளை பதித்த டெண்டர் எடுத்துள்ள உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், ஒவ்வொரு வார்டிலும் போராட்டங்கள் நடத்தப்படும்'' என்றார்.
நகர தலைவர் சண்முகம் பாபு முன்னிலை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் பார்வதி, பொதுச்செயலாளர் சதாசிவம், மண்டல பொருளாளர்கள் மனோகரன், சிவகுமார், மாவட்ட துணைத் தலைவர்சண்முகம், முருகேஷ், செயலாளர் கஸ்துாரிபிரியா, பொருளாளர் டாக்டர் சுந்தரம் மற்றும் பூண்டி, அவிநாசி, சேவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.