ADDED : ஜன 06, 2025 05:29 AM
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.,வில் உள்ள 19 மண்டலங்களில் 14 மண்டலங்களுக்கு புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மண்டல தலைவர் தேர்தல் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடந்தது. தேர்தல் அதிகாரி வைரவேல், இணை தேர்தல் அதிகாரி மாநில செயலாளர் மலர்கொடி முன்னிலையில் நடந்தது.
தேர்வு செய்யப்பட்ட புதிய மண்டல தலைவர்கள்: நல்லுார் நாகேந்திரன், எம்.எஸ்., நகர் வினோத், பொங்கலுார் கிழக்கு திருநாவுக்கரசு, திருப்பூர் தெற்கு ஒன்றியம் சரவணகுமார், கொங்கு நகர் முரளி, ராயபுரம் மதேஷ், அங்கேரிபாளையம் சுதாமணி, ஆண்டிபாளையம் பன்னீர்செல்வம், பல்லடம் தெற்கு ஒன்றியம் பிரதீப் சக்தி, வீரபாண்டி வெள்ளியங்கிரி, கருவம்பாளையம் சங்கர், பல்லடம் நகர் பன்னீர்செல்வம், பல்லடம் மேற்கு ஹரிஹரன், பொங்கலுார் மேற்கு சந்தனகிருஷ்ணன்.
முதன் முறையாக, பெண் நிர்வாகி சுதாமணி அங்கேரிபாளையம் மண்டலத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

