/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ., சாலை மறியல் திட்டம்; பல்லடம் போலீசார் சமரசம்
/
பா.ஜ., சாலை மறியல் திட்டம்; பல்லடம் போலீசார் சமரசம்
பா.ஜ., சாலை மறியல் திட்டம்; பல்லடம் போலீசார் சமரசம்
பா.ஜ., சாலை மறியல் திட்டம்; பல்லடம் போலீசார் சமரசம்
ADDED : ஜன 04, 2024 01:01 AM
பல்லடம்,: பொள்ளாச்சி, உடுமலை செல்லும் பஸ்கள், வடுகபாளையம் பஸ் ஸ்டாப்பில், நின்று செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இது தொடர்பாக, பல்லடம் நகர பா.ஜ.,வினர், நேற்று காலை, பல்லடம் -- பொள்ளாச்சி ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ஜ.,வினரை சமாதானப்படுத்திய போலீசார், போக்குவரத்து கழக மேலாளருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர்.
அமைதி பேச்சுவார்த்தையில், வடுகபாளையம் பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்லும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:
வடுகபாளையம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளன. தொழில், வியாபாரம், வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளுக்கு அன்றாடம் சென்று வர வேண்டி உள்ளது.
ஆனால், அவ்வழியாக வந்து செல்லும் அரசு பஸ்கள், வடுகபாளையம் பஸ் ஸ்டாப்பில் நிறுத்துவதில்லை. இதனால், பல்லடம் பஸ் ஸ்டாண்ட் சென்று பஸ்கள் ஏறும் நிலை உள்ளதால், தேவையற்ற அலைச்சல், காலதாமதம் ஏற்படுகிறது. வடுகபாளையம் பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.