ADDED : பிப் 03, 2025 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்: பொங்கலுார், சேமலை கவுண்டம்பாளையத்தில், 2024 நவ., 29ல் தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, மகன் செந்தில் குமார் ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். கொலையாளிகள் கண்டறியப்படவில்லை. கொடுவாயில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கவர்னரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அவ்வகையில், பெருந் தொழுவில் பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, மண்டல பொதுச் செயலாளர் பொன்னுசாமி, பெருந்தொழுவு பஞ்சாயத்து பொறுப்பாளர் கோவிந்தசாமி ஆகியோர் பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
அனைத்து பகுதியிலும், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகிறோம் என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

