ADDED : பிப் 09, 2025 12:35 AM

அவிநாசி : டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது.
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் நகர பா.ஜ., சார்பில் நகரத் தலைவர் தினேஷ்குமார் தலைமையில், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம், பாராளுமன்ற இணை பொறுப்பாளர் கதிர்வேலன், கிழக்கு ஒன்றிய தலைவர் ஜெகதீசன், தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன், மண்டல் துணைத் தலைவர் சித்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கோஷம் போட்டு பா.ஜ., வெற்றியை கொண்டாடினர்.
திருப்பூர் - காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில், நல்லுார் மண்டலம் பா.ஜ., சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கட்சியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மண்டல குழு தலைவர் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாய்ன்ட் மணி, மாநில விவசாய அணி பொது செயலாளர் கவிதா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.