
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகர அங்கேரிபாளையம் மண்டல பா.ஜ சார்பில், லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில் கிராமப்புற பகுதிக்கு செல்வோம் நிகழ்ச்சிக்கான பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீ நகர் விநாயகர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. மண்டல தலைவர் ராம்குமார், தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் பாலசுப்பிரமணியம், துணை தலைவர் பாலு ஆகியோர் பேசினர். வீடு தோறும் சென்று மத்திய அரசின் சாதனைகளை எடுத்து கூற வேண்டும்.
அனைவருக்கும் வீடு, 24 மணி நேர குடிநீர், ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு, சாலையோர வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி, பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகிய மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

