
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் பா.ஜ., வடக்கு மாவட்ட கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் வேல வேந்தன் தலைமையில் அக்கட்சியினர், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மணிமாறனிடம் நேற்று அளித்த மனு:
மத்திய அரசு, கல்வி உரிமை சட்டத்தில் (ஆர்.டி.இ.,), ஏழை மாணவர்களின் கல்விக்காக, நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதன்படி, மத்திய அரசு, 586 கோடி ரூபாயை, மாநில அரசுக்கு வழங்கியுள்ளது. அந்த தொகையை, தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால், இலவச கல்வியில் சேரும் பெற்றோர், மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. மாநில அரசு, உடனடியாக தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கவேண்டும். இதை வலியுறுத்தி, பா.ஜ., சார்பில், வரும் 4ம் தேதி சென்னையில் கட்டண ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

