ADDED : அக் 30, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:  சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். போலீஸ் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் தீபா சத்யன், பிரவீன் கவுதம் மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
'டூவீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும்; வாகனம் ஓட்டும்போது, மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது. கார்களில் பயணிப்போர், கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும்.
இது தொடர்பான விழிப்புணர்வு பேனர்களை, வாகன ஓட்டிகள் எளிதில் அறியும்வகையில் வைக்கவேண்டும்' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.

