/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; தொழிற்சங்கத்தினர் முடிவு
/
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; தொழிற்சங்கத்தினர் முடிவு
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; தொழிற்சங்கத்தினர் முடிவு
கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; தொழிற்சங்கத்தினர் முடிவு
ADDED : செப் 19, 2024 06:29 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூட்டம், அவிநாசி ரோடு சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
சி.ஐ.டி.யு., பொது செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் மூர்த்தி, பனியன் சங்க செயலாளர் சம்பத், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுசெயலாளர் நடராஜன், பனியன் சங்க பொதுசெயலாளர் சேகர், எல்.பி.எப்., மாவட்ட துணை தலைவர் ரங்கசாமி, ஓட்டல் சங்க செயலாளர் மகேஷ், ஐ.என்.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சிவசாமி, எச்.எம்.எஸ்., சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, எம்.எல்.எப்., மாவட்ட செயலாளர் சம்பத், பனியன் சங்க செயலாளர் மனோகரன் பங்கேற்றனர்.
தொழிலாளர் நீண்டகாலம் போராடி பெற்ற சட்டங்கள் சுருக்கப்பட்டுள்ளன. அதாவது, 44 சட்டங்கள், நான்கு தொகுப்புகளாக தொகுக்கப்பட்டுள்ளன. முழுமையாக அமல்படுத்த, மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, வரும் 22ம் தேதி நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
திருப்பூரில், 23ம் தேதி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது. மாலை, 5:00 மணிக்கு குமரன் சிலை அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என, தீர்மானிக்கப்பட்டது.