/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., அரசை கண்டித்து கருப்பு கொடி போராட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து கருப்பு கொடி போராட்டம்
ADDED : மார் 22, 2025 11:06 PM

திருப்பூர்: தி.மு.க., அரசை கண்டித்து திருப்பூரில் பா.ஜ., மாவட்ட தலைவர் வீட்டில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக முதல்வர் செயல்படுகிறார். தமிழகத்தை வஞ்சித்து வரும் கர்நாடக, கேரளா மாநில தலைவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ., வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், வடக்கு, தெற்கு, பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட பா.ஜ., வினர் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் உள்ள மாவட்ட தலைவர் சீனிவாசன் வீட்டில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். மாவட்ட துணை தலைவர்கள் தங்கராஜ், பாலு, மாவட்ட செயலாளர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர். தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.