/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முற்றுகை போராட்டம்; மாற்றுத்திறனாளிகள் கைது
/
முற்றுகை போராட்டம்; மாற்றுத்திறனாளிகள் கைது
ADDED : நவ 11, 2025 11:19 PM

திருப்பூர்: உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 130 பேர், கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார்.
இதில், மாற்றுத்திறனாளிகள் 160 பேர் பங்கேற்றனர். மாதாந்திர உதவித்தொகையை, ஊனமுற்றோருக்கு 5 ஆயிரம் ரூபாயாகவும்; கடுமையான உடல் உறுப்பு பாதிக்கப்பட்டோருக்கு, 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
படுக்கையில் வாழும் மாற்றத்திறனாளிகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, தடையை மீறி கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்து முற்றுகையிடவும்,ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடவும் முயன்றனர்.
இதனையடுத்து, 130 மாற்றுத்திறனாளிகளை கைது செய்த போலீசார், அருகிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனர்.

