/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சலங்கை நிருத்யாலயா மாணவியர் அபாரம்
/
சலங்கை நிருத்யாலயா மாணவியர் அபாரம்
ADDED : நவ 11, 2025 11:19 PM

அவிநாசி: அண்ணாமலை பல்கலை தொலைதுார கல்வி இயக்கத்தின் கீழ் நாட்டிய வாரிய தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் அவிநாசியில் நடந்தது.
இதில், அவிநாசி சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக்கூடத்தின் சார்பில், 98 மாணவியர் கிரேடு - 1 முதல் கிரேடு - 8 வரையிலான நாட்டிய செயல்முறை மற்றும் எழுத்து தேர்வுகளில் பங்கேற்றனர். தற்பொழுது பல்கலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தேர்வில் பங்கு பெற்ற அனைத்து மாணவிகளும் முதல் வகுப்பில் சிறப்பு நிலை தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவியரை அவிநாசி சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக்கூடத்தின் தாளாளர் வடிவேல் மற்றும் ஆசிரியை குரு தேவிகா ஆகியோர் பாராட்டினர். பெற்றோர்களும் மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

