நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ பிறந்த நாளையொட்டி கோவை மண்டல இளைஞர் அணி சார்பில், மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்தினசாமி தலைமையில் ரத்த தான முகாம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் நடந்தது.
மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் தமிழரசு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பிறந்த நாளை கொண்டாடும் வகையில், 181 நபர்கள் ரத்த கொடையினை வழங்கினர்.