நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
திருப்பூர் மஸ்ஜிதுல் ஹூதா பள்ளி வாசலில் நடந்த முகாமை, சாலிடாரிட்டி அமைப்பின் மாநில தலைவர் கமாலுதின் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு, 40 பேர் ரத்த தானம் வழங்கினர். ரத்ததானம் செய்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. ஜமாத்தே இஸ்லாமிய அமைப்பினர் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

