நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்கலம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ரத்த தான முகாம் நடந்தது.
கிளை தலைவர் நஷீர், செயலாளர் சான்பாஷா முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சிக்கந்தர், துணை தலைவர் யாசர் அராபத் ஆகியோர் துவக்கி வைத்தனர். திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் குழுவினர் ரத்த வங்கிக்கு ரத்தம் சேகரித்தனர். ரத்த தானம் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.