UPDATED : ஜூலை 23, 2026 10:37 PM
ADDED : ஜூலை 23, 2026 10:04 PM
அ நிறம் | அளவு
காங்கயம்:காங்கயத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான முகாமில் 18 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற முகாமுக்கு சாவடிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் இளங்கோ முன்னிலை வகித்தார்.
மாவட்ட ரத்த தான மருத்துவக் குழுவினர், ரத்தம் சேகரித்தனர். மொத்தம் 18 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முகாமில் மருத்துவ அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ ரத்தக்கொடையாளர்கள் பங்கேற்றனர்.
